Textile manufacturers strike! -1953998380
ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்! 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு..! திருப்பூர், கோவை மாவட்டங்களில் நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. நூல் விலை உயர்வு திருப்பூர் பின்னலாடை உள்பட ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. கடந்த 18 மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது. இதில் நூல் விலை உயர்வு குறித்தும், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 2 லட்சம் விசைத்தறிகள் இந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம், சோமனூர், அவினாசி, மங்கலம், தெக்கலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத...