\"இவரிடம் தோற்பதே பெருமைதான்!\" 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம்!2143482800
\"இவரிடம் தோற்பதே பெருமைதான்!\" 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம்! 2005-ல் அந்த சிறுவனுக்கு வெறும் ஆறு வயதுதான். ஒன்றுமே அறியாத புரியாத ஒருவித மகிழ்ச்சி மட்டுமே நிரம்பிய பருவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அதே காலக்கட்டத்தில் டென்னிஸ் உலகில் ஓர் இளம் வீரனும் அறிமுகமானான். ஆரம்பத்திலேயே அதகளங்களை நிகழ்த்தினான். 2005-ல் பிரெஞ்சு ஓப்பனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாமை வென்று களிமண்ணிலிருந்து ஒரு ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பத் தொடங்கினான். நாள்கள் நகர்ந்தன. காலங்கள் உருண்டோடின. 2022 வந்துவிட்டது. ஒன்றுமறியாமல் குழந்தையாகச் சுற்றி திரிந்தானே அந்தச் சிறுவனுக்கு இப்போது 23 வயது. 17 ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறோம். ஆனால், இன்னமும் களிமண்ணில் அந்த மற்றொரு டென்னிஸ் வீரன் கட்டியெழுப்பிய கோட்டை அதே கம்பீரத்தோடு அப்படியே நிற்கிறது. 2022-லும் இந்த களிமண் களத்தின் ராஜா அவனாகத்தான் இருக்கிறான். இந்த முறையும் பிரெஞ்சு ஓப்பனின் டைட்டில் வின்னர் அவன்தான்! அவரை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பதை இரண்டாவது வரியிலேயே கண்டுபிடித்திருப்பார்கள். ...