விஜயின் \'பீஸ்ட்\' படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தடை!
விஜயின் \'பீஸ்ட்\' படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தடை! பீஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பால் முகவர்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி புதன் அன்று வெளியாகவுள்ளது. இதையொட்டி ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கையாக சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பொறுப்பற்ற தன்மையோடு வன்முறை செயலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என முன்னோர் சொன்ன கூற்று தற்போது...