பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம். அந்த நிறுவனம் 6 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் நடிக்க மறுத்து விட்டாராம் அல்லு அர்ஜுன். நடிகர், நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பதெல்லாம் தற்போது தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் விளம்பரங்களில் நடித்து கலக்கிய விஜய், அஜித், கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் தற்போது அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் கவனம் செலுத்து வருகின்றனர். அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளிகளே விளம்பரங்களில் நடிப்பது தான் தற்போது இங்கு டிரெண்டாக உள்ளது. விரிவாக படிக்க >>