தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
வெப்பசலனத்தால் தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment