வரி சேமிப்பு மற்றும் கூடுதல் வட்டி - மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்!


வரி சேமிப்பு மற்றும் கூடுதல் வட்டி - மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்!


அதே சமயம், இத்தகைய பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ரிஸ்க் அதிகம் இல்லாதவையாகவும், முதலீட்டு காலத்தை விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்க வேண்டும். 100க்கு 100 சதவீதம், சந்தை நிலவரங்களுக்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் திட்டங்களில் சேர மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நிலையான வருமானம் தரக் கூடிய பிக்ஸட் டெபாஸிட் திட்டங்களைத் தான் தேர்வு செய்கின்றனர்.

இத்தகைய மூத்த குடிமக்களை, மேலும் கவரும் வகையில் கூடுதல் வட்டி விகிதங்களை வங்கிகள் வழங்கத் தொடங்கியுள்ளன. அதே சமயம், நீங்கள் தேர்வு செய்யும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், வரி சேமிப்புடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களாக இருக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரி விலக்கு

வரி சேமிப்புடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி-யின் கீழ் நீங்கள் வரி விலக்கு பெறமுடியும். ஆனால், அதிகபட்ச வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம், வாடிக்கையாளர்களுக்கு வரி சேமிப்பு பலன்களை வழங்கக் கூடிய திட்டங்கள் அனைத்தும் 5 ஆண்டுகால முதலீடுகளை கொண்டவை என்று நிதிசார்ந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பணத்தை பெறவோ, மெட்சூரிட்டி காலத்திற்கு முன்பு பணத்தை வித்டிராவல் செய்யவோ முடியாது.

வரி சேமிப்புடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் வரை கூடுதல் வட்டி கிடைக்கிறது. வரி சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ஆனால், அக்கவுண்டில் முதலாம் இடத்தில் உள்ள நபருக்கு மட்டுமே வரி சேமிப்பு பலன்கள் கிடைக்கும்.

இருப்பினும், பிக்ஸட் டெபாசிட் ரிட்டர்ன்ஸ் மீது டிடிஎஸ் வரி பிடித்தம் செல்லுபடியாகும். எனினும், படிவம் 15 ஹெச் வழங்கி இந்த வரி பிடித்த நடவடிக்கையை மூத்த குடிமக்கள் தவிர்க்கலாம். வருமான வரிச் சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பிரிவு 80 டிடிபி-யின் படி முதலீடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் வருமானத்தில் ரூ.50,000 வரையில் கூடுதலாக வரிச் சலுகைகளை பெற முடியும்.

 

Comments

Popular posts from this blog

Travel The World, Live in Other Cities, Learn Cultures - The Cool Hunter Journal

தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்!