சம்மர் வந்தாச்சு... குழந்தைகளை வேர்க்குரு, வெயில் கொப்புளங்களில் இருந்து காக்க டிப்ஸ்
சம்மர் வந்தாச்சு... குழந்தைகளை வேர்க்குரு, வெயில் கொப்புளங்களில் இருந்து காக்க டிப்ஸ்
ஆனால் குழந்தைகளை கொடுமையான வெயில் மற்றும் அதனால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து காக்க முடியும். குழந்தைகளை வெயில் கால சரும பிரச்சனைகள் மற்றும் நோய்களில் இருந்து காக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்..
கோடை காலத்தில் செய்ய வேண்டியவை:
1. உங்கள் குழந்தைகள் அதிக தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு, பழச்சாறு போன்ற புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அருந்துவதை கட்டாயமாக்குங்கள். உடலில் நீர்ச்சத்து சேர உதவும் தர்ப்பூசணி போன்ற நீரேற்றம் நிறைந்த பழங்களையும் சாப்பிட கொடுக்கலாம்.
2. குழந்தைகளின் சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டவும். குளியலின் போது ரசாயன சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்கள் அடங்கிய அல்லது குறைந்த வேதிப்பொருட்கள் கொண்ட பேபி வாஷ்களை பயன்படுத்துங்கள்.
3. உச்சி வெயில் நேரத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
4. குழந்தைகளின் உடலில் முகம், கைகள் மற்றும் கழுத்து போன்ற சூரிய ஒளிபடும் பகுதிகளில் எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் தாராளமாக சன்ஸ்கிரீனை பூசிவிடுங்கள். 4-5 மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீனை பூச மறக்காதீர்கள்.
5. பிள்ளைகளின் கை, கால்களை கவர் செய்யும் படியான முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வெளியே அனுப்பலாம். பருந்தி ஆடைகளை அணிவிப்பது குழந்தைகளின் சருமத்திற்கு மேலும் ஆரோக்கியமானது. இறுக்கமான உடைகளை தவிர்த்து விடுங்கள்.
6. வெயிலில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும் குழந்தையில் உடலில் கற்றாழை ஜெல்லை பூசிவிடுங்கள். இது சருமத்தை மென்மையாக்குவதோடு, வெயிலால் சருமத்தில் ஏற்படக்கூடிய வறட்சி, எரிச்சல், தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். இளம் பருவத்தினருக்கு முகத்தை மென்மையான ஃபேஸ் வாஷ் மூலம் எப்படி சுத்தம் செய்வது என்று கற்றுக்கொடுப்பதன் மூலமாக முகப்பரு பிரச்சனைகளில் இருந்து அவர்கள் தப்பிக்க உதவலாம். கோடை வெப்பத்தில் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க அவர்கள் ஒரு நாளைக்கு 2-3 முறை முகத்தை கழுவ வேண்டும்.
7. வளர்ந்த குழந்தைகளுக்கு சந்தனம் அல்லது வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை குளிர்ந்த ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் கொண்டு பூசலாம்.
செய்யக்கூடாதவை:
1. பாலிஸ்டர், சிஃப்பான் போன்ற செயற்கைத் துணிகளை குழந்தைகளுக்கு அணிவிக்காதீர்கள். பருந்தி ஆடைகள் மட்டுமே நல்லது.
2. குழந்தைகளை குளிக்க வைக்க மறக்காதீர்கள். பாக்டீரியா தொற்று மற்றும் தோல் எதிர்விளைவுகளைத் தவிர்க்க கோடையில் தூய்மை மிகவும் முக்கியமானது.
Body Shaming : தோற்றம் பற்றி கவலைப்படும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்ல வேண்டிய அறிவுரை..!
3. உச்சந்தலை மற்றும் தலையில் இருந்து அதிகமாக வியர்க்கக்கூடும், இதனால் பாக்டீரியா தொற்று மற்றும் உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் உச்சந்தலை மற்றும் முடியை சுத்தமாக வைத்திருக்க இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மென்மையான நுரை வரும் குழந்தை ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.
4. கோடை வெப்பம் உங்கள் குழந்தையின் சருமத்தை வறண்டு போக வைக்கும், எனவே ஒரு நல்ல பேபி மாய்ஸ்சரைசர் அல்லது பேபி கிரீமை பயன்படுத்தலாம்.
5. வியர்வையை உறிஞ்சுவதற்கு டால்கம் பவுடரைப் பயன்படுத்த வேண்டாம்; மாறாக, கோடை வெப்பத்தில் புத்துணர்ச்சியையும் வறட்சியையும் பராமரிக்க உதவும் இயற்கையான டால்க் இல்லாத பேபி பவுடரைத் தேர்ந்தெடுக்கவும்.
6. குழந்தைகளை நன்கு ஹைட்ரேட்டாக வைத்திருக்க மறக்காதீர்கள். அவர்கள் போதுமான தண்ணீர் மற்றும் தேங்காய் தண்ணீர், எலுமிச்சை பழம் மற்றும் ப்ரஸ் ஜூஸ் போன்றவற்றை குடிக்க உற்சாகப்படுத்துங்கள். ஒருபோதும் கவர்ச்சியான பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை கொடுக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆங்கிலம் கற்று தருவதால் கற்றல் திறன் மேம்படும்- ஆய்வில் தகவல்!
7. சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம். வெப்பநிலை மற்றும் சூரிய வெளிச்சம் மிக அதிகமாக இருக்கும் போது. வீட்டிற்குள்ளேயே இருங்கள் மற்றும் உங்கள் வீடுகளை நன்கு காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது நல்லது.
8. குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் முன்பு சன்ஸ்கிரீனை கட்டாயம் பூச வேண்டும். எக்காரணம் கொண்டும் நல்ல SPF கொண்ட சன்ஸ்கிரீனை குழந்தைகளுக்கு பூசி விடுவதை மறக்காதீர்கள்.
9. குழந்தைகளுக்கு ஏதாவது அலர்ஜி, வெயில் கொப்புளங்கள், வியர்க்குரு ஏற்பட்டால் சுயமாக முடிவெடுத்து மருந்து கொடுக்காதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிப்பது நல்லது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment