தயாரிப்பாளர் என்று கூறி கட்டாய தாலி கட்டி பாலியல் தொழில் செய்ய வலியுறுத்துகிறார்: துணை நடிகை பைரவி டிஜிபி அலுவலகத்தில் கண்ணீர் மல்க பரபரப்பு புகார்
சென்னை: கட்டாய தாலி கட்டி பாலியல் தொழில் செய்ய வேண்டுமென வலியுறுத்துவதாக தயாரிப்பாளர் ஒருவர் மீது துணை நடிகை பரமேஸ்வரி(எ) பைரவி கண்ணீர் மல்க டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி(எ)பைரவி என்பவர் பன்னாட்டு பெண்கள் அமைப்பு தலைவர் செங்கொடி பாலகிருட்டிணன் என்பவர் உதவியுடன் இன்று காலை அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சின்னத்திரையில் நடிகையாக இருக்கும் எனக்கு வேலூரை சேர்ந்த ராஜதேசிங்(எ)சுப்ரமணி என்பவர் தயாரிப்பாளர் என்று அறிமுகமானார். பிறகு என்னை தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கோயில் ஒன்றில் கட்டாய தாலிக்கட்டி மனைவியாக்கினார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment