சென்னையில் 8 ரூபாய் குறைந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
சென்னையில் 8 ரூபாய் குறைந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி ரூ.9ம், டீசலுக்கான வாட் வரி ரூ7ம் குறைக்கப்பட்டதை அடுத்து சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை 8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் மத்திய அரசை அடுத்து ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான விலை குறைந்துள்ளதால் இந்த இரு மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறைந்து விட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு இன்னும் பெட்ரோல் டீசலுக்கான மாநில அரசு வரியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment