அரபி குத்து பாடலை ஓரம் கட்டிய ஆண்டவர் ஸ்டெப்.! வைரலாகும் ரசிகர்கள் ரீல்ஸ்.
அரபி குத்து பாடலை ஓரம் கட்டிய ஆண்டவர் ஸ்டெப்.! வைரலாகும் ரசிகர்கள் ரீல்ஸ்.
சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திலிருந்து ‘பத்தல பத்தல’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கமல்ஹாசன் அவர்கள் எழுதி அவரே பாடியுள்ளர்ர்.இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல் அனிருத் கூட்டணி இணைந்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியன்2 திரைப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக்கத்தில் உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை கமல் எழுதி பாடியதால் கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாடலில் கமல்ஹாசன் தனது பாணியில் வடசென்னை மொழிகள் சில அரசியல் கருத்துகளையும் பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி தற்போது வரை 15 மில்லியன் பேருக்கு மேல் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலில் இடையில் கமல் ஆடுவது போல அமைக்கப்பட்டு இருந்த அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகின்றன. இதற்கு ஆண்டவர் ஸ்டெப் என பெயரிட்டு அந்த அசைவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் இதேபோல யூடிபில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment