தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்201826949


தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

இதுவரை தமிழகத்தில் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது.

இதுவரை இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை.

அவ்வாறு செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர். சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog