வரி சேமிப்பு மற்றும் கூடுதல் வட்டி - மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்! அதே சமயம், இத்தகைய பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ரிஸ்க் அதிகம் இல்லாதவையாகவும், முதலீட்டு காலத்தை விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்க வேண்டும். 100க்கு 100 சதவீதம், சந்தை நிலவரங்களுக்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் திட்டங்களில் சேர மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நிலையான வருமானம் தரக் கூடிய பிக்ஸட் டெபாஸிட் திட்டங்களைத் தான் தேர்வு செய்கின்றனர். இத்தகைய மூத்த குடிமக்களை, மேலும் கவரும் வகையில் கூடுதல் வட்டி விகிதங்களை வங்கிகள் வழங்கத் தொடங்கியுள்ளன. அதே சமயம், நீங்கள் தேர்வு செய்யும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், வரி சேமிப்புடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களாக இருக்க வேண்டும். வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரி விலக்கு வரி சேமிப்புடன் கூடிய முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி-யின் கீழ் நீங்கள் வரி விலக்கு பெறமுடியும். ஆனால், அதிகபட்ச வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம், வ...