அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இன்று தொற்று 2000-க்கும் கீழ் சரிந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 21ஆம் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22ஆம் தேதி 2,226 ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3ஆவது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழே சரிந்துள்ளது. கொரோனாவால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40,068 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,635 பேர் குணமாகி உள்ளனர். அதன்படி, இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 14,841 பேர் சிகிச்சையில் உள்ளனர். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை...